இந்து என்ற பெயர் வெள்ளையர்கள் வைத்தானா
நண்பர் : இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை. நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ. நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார். அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை. நான் : அப்படீனா 15ஆம் நூற் றாண்டில் இரண்டாம் தேவராய மகாராய மகாராஜா தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்??? "சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - "இந்து ராயசுரத்ராண" இராசாதி ராசன் இராச பரமேசுவரன் பூர்வ தட்சிண பச்சிம உத்தர சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம் 1373 ன் மேல் செல்லா நின்ற பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று அமரபட்சத்து நவமியும் வியாழக் கிழமையும் பெற்ற திருவொணத்து நாள்" - இரண்டாம் தேவராய மகாராயரின் மெய்க்கீர்த்தி(1426-1452) நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியா...