ஏகமாதா பகுபிதா என்ற மந்திரம் உண்மையா
திராவிட இனத்தைச் சேர்ந்த நமது முதல்வர் இசுடாலின் அவர்கள் முதற்கொண்டு சிலருக்கு இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகள் மீது ஒருவிதமான காழ்ப்புணர்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். அடுத்த மதத்தவர்களின் திருமண வைபவங்களுக்குச் சென்று இந்துக்களின் திருமண மந்திரங்கள் ஆபாசமானது என்று கூறும் அளவுக்கு நம் முதல்வர் சமஸ்கிருதம் நன்கு அறிந்திருந்தார் என்பதை நாம் ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்திருந்தோம்...! ஏன் ஒரு முதல்வரின் பெயரை முன்மொழிகிறேன் என்றால் நமது மாநிலத்தின் முதல்வரே இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்களான இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை விமர்ச்சிக்கும்போது சாமான்யர்கள் விமர்ச்சிக்கமாட்டார்களா? என்ன??? ஒருவேளை இந்துமதத்தை விமர்ச்சனங்களுக்கு உள்ளாக்கினால் அழிந்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ😒😒😒 ஆனால் இந்து மதமானது ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என்று காலம் காலமாக விமர்ச்சனங்களில் இருந்தும் சூழ்ச்சிகளில் இருந்தும் தன்னைத்தானே மெருகேற்றி வளர்ந்து நிற்கும் ஓர் மதமென்பதை அறிவார்களா? ஆக இவர்களின் விமர்ச்சனங்களால் இந்துமதம் அழிந்துவிடும் என்று சிலர் எண்ணினால் அது அவர்களுக்கு கானல் நீரே என்பத...