ஏகமாதா பகுபிதா என்ற மந்திரம் உண்மையா
திராவிட இனத்தைச் சேர்ந்த நமது முதல்வர் இசுடாலின் அவர்கள் முதற்கொண்டு சிலருக்கு இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகள் மீது ஒருவிதமான காழ்ப்புணர்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். அடுத்த மதத்தவர்களின் திருமண வைபவங்களுக்குச் சென்று இந்துக்களின் திருமண மந்திரங்கள் ஆபாசமானது என்று கூறும் அளவுக்கு நம் முதல்வர் சமஸ்கிருதம் நன்கு அறிந்திருந்தார் என்பதை நாம் ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்திருந்தோம்...!
ஏன் ஒரு முதல்வரின் பெயரை முன்மொழிகிறேன் என்றால் நமது மாநிலத்தின் முதல்வரே இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்களான இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை விமர்ச்சிக்கும்போது சாமான்யர்கள் விமர்ச்சிக்கமாட்டார்களா? என்ன??? ஒருவேளை இந்துமதத்தை விமர்ச்சனங்களுக்கு உள்ளாக்கினால் அழிந்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ😒😒😒 ஆனால் இந்து மதமானது ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என்று காலம் காலமாக விமர்ச்சனங்களில் இருந்தும் சூழ்ச்சிகளில் இருந்தும் தன்னைத்தானே மெருகேற்றி வளர்ந்து நிற்கும் ஓர் மதமென்பதை அறிவார்களா? ஆக இவர்களின் விமர்ச்சனங்களால் இந்துமதம் அழிந்துவிடும் என்று சிலர் எண்ணினால் அது அவர்களுக்கு கானல் நீரே என்பதை கூறிக்கொண்டு தொடர்கிறேன்....!
இவர்களின் வரிசையில் நண்பர் ஒருவர் ஒரு மந்திரத்தை கூறி உங்கள் மதம் எங்கள் தாயை வேசி என்கிறதே என்று கூறியதோடு, இதனால்தான் இங்கு மதமாற்றங்கள் வேரூன்றுகின்றன என்று கூறினார். சிந்தித்து நோக்கினால் பகவத்கீதையை கண்ணால் காணாதவர்கள் தான் இன்று மதம் மாறியிருக்கிறார்கள். இந்துமதம் என்றால் என்ன என்பதை ஒருவன் சுய விருப்பத்தோடு தேடி அறிய முயற்சிக்காமல்தான் மதம் மாறியிருக்கிறார்கள். இந்துமதத்தை அறிய வேண்டி அதன் சித்தாந்த தத்துவ நூல்களை தேடி படிக்காதவர்கள்தான் மதம் மாறியிருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க சமஸ்கிருதம் படித்து சமஸ்கிருத ஸ்லோகங்களின் அர்த்தத்தை உணர்ந்து அது தவறாக உள்ளது என்றோ, அதுதான் இந்துதர்மத்தின் மூலநூல் என்று நினைத்துக்கொண்டு இந்துதர்மமே இப்படிதான் என்று மதமாறியவர்கள் உண்டா? என்பது கேள்விக்குறியே. எனினும் அந்நபர் கூறிய சமஸ்கிருத ஸ்லோகத்திற்கான உண்மைத்தன்மை என்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்...!
"ஏகமாதா பகுபிதா சச் சூத்ராய நமஹா"
இதுதான் இவர்கள் சொல்லும் மந்திரம் அதாவது இதற்கு பொருளாக (ஏகமாதா ) ஒரு தாய்க்கும் (பகுபிதா) பலதகப்பனுக்கும் பிறந்த,(சச்) உண்மையான, (சூத்ராய) வைப்பாட்டி மகன் (நமஹா) வணங்குகிறேன் என்று தமிழில் இந்த ஸ்லோகத்தை மொழிபெயர்த்து முகநூல் முழுவதும் சுற்றவிட்டுக்கொண்டிருக்கின்றனர்...!
இந்த மந்திரம் எங்கே உபயோகிக்கப்படுகிறது என்பதற்கு மூன்று விதமாக பதில் சொல்கின்றனர்.
1. சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்பேது.
2. பூஜை செய்ய வரும் பக்தர்களை நோக்கி
3. தர்பணம் கொடுப்போரை வைத்து சொல்ல வைக்கிறார்கள்.
(இதில் எதுவென அவர்களிடமே தெளிவு இல்லை.)
முதலில் இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள மூலநூல் எதுவென தேடுதலானேன். நான் தேடி எனக்கு எங்குமே கிடைக்காததால் நான் அறிந்த சில வடமொழி அறிஞர்களிடம் இந்த ஸ்லோகத்தை கூறி இது எந்த நூலில் உள்ளது என்று கேட்டேன். முகநூல் வாசமே அறியாத அவ்வறிஞர்கள் என்னையும் எனது கேள்வியையும் கண்டு நகைத்தார்கள். ஏன் என்று வினவியபோது இந்த ஸ்லோகம் கோர்வையாக இல்லை எனவும் இதற்கு எதாவது பொருள் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டனர். அதாவது இந்த ஸ்லோகத்தை கோர்வையாக படித்தால் பொருளற்றது என்பது அவர்களின் வாதம். அதோடு இச்சுலோகம் நாங்கள் அறிந்த எந்த இந்துதர்மத்தின் எந்த அதிகாரப்பூர்வ நூலிலும் இல்லை என்று ஆணித்தனமாக கூறிவிட்டனர்...!
அவர்களிடம் கேட்டதோடு மட்டும் நில்லாமல் எதிர் கருத்துடைய பலரிடமும், இந்த ஸ்லோகத்தை தூக்கி சுமக்கும் அன்பர்களிடமும் இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள மூலநூல் எதுவென வினவியபோது அவர்களின் பதில் எங்களுக்கு தெரியாது என்பதாகவே இருந்தது. இறுதியில் இதை முகநூலிலே கேட்டுவிடுவோம் என்று இந்த பதிவை எழுதுகிறேன்...!
(அதாவது உங்களில் யாருக்கேனும் துணிவிருந்தால் இந்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள அதாவது இந்துதர்மத்தின் அதிகாரப்பூர்வ எதாவது ஒரு நூலில் இடம்பெற்றிருந்தால் இந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்நூலின் பெயரோடு அப்பகுதியை SS எடுத்து பதியவும். இப்பதிவானது இந்த ஸ்லோகத்தை தூக்கி சுமக்கும் #புகுத்தறிவாளர்களுக்கு ஓப்பண் சேலஞ்ச்.💪👈 )
இருப்பினும் சொற்களின் மூலத்தை கொண்டு இதற்கான பொருளை எழுத முற்பட்டால்,
ஏக மாதா : ஒரு தாயும்
பகு பிதா : பக்குவப்பட்ட தந்தைக்கும்
சச் : சத்தியாமான , உண்மையான
சூத்திரன் : உழைப்பில் உயர்ந்தவன்
இதன் பொருள் :
"ஒரு தாய்க்கும், பக்குவப்பட்ட தந்தைக்கும், உண்மையாக பிறந்தவரை வணங்குகிறேன்"
இந்த டுபாக்கூர் ஸ்லோகத்திலுள்ள "பகு" என்ற சொல்லுக்கு தமிழில் பிரித்தல், பங்கிடுதல், வகுத்தல் என்பதுபோன்ற பல பொருள்கள் வரும். ஆனால் சமஸ்கிருதத்தில் ' பகு ' என்ற சொல்லுக்கு பக்குவம் என்ற பொருளும் உண்டு என்று விளக்கத்தை கூறி கடந்து செல்லவும் முடியாது. ஏனெனில் இல்லாத ஒரு ஸ்லோகத்திற்கு இருப்பதாக எண்ணி அதற்கு உயிரூட்டமளித்தால் அது இருப்பதாகவே நம்பப்பட்டு ஒரு பொய்யான வரலாற்றை எழுதிவிடுவர்...!
ஆகவே இந்த ஸ்லோகம் எந்த நூலில் உள்ளது என்ற கேள்வியோடு இந்த ஸ்லோகத்தை தூக்கி சுமப்பவர்களுக்கு சவாலும் விடுகிறேன். உங்களால் முடிந்தால் இந்த ஸ்லோகம் எந்த இந்துமத அதிகாரப்பூர்வ நூலில் உள்ளது??? அந்த மூலநூலின் பகுதியை SS எடுத்து இந்த பதிவின் பின்னூட்டத்தில் பதியுங்கள்.
குறிப்பு :
1. வினவு, விடுதலை, கீற்று போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளின் லிங்கை பதியக்கூடாது.
2. இந்துதர்மத்தை சார்ந்த இந்நபர் எழுதியுள்ளார் என்ற மேற்கோள் குறிப்பை கொண்டுவரக்கூடாது.
3. மிகமுக்கியமாக இதற்கு சான்று கொடுக்க வருவோர் மூலநூலின் "Screenshot" உடன் வரவேண்டும்.
நன்றி:
பா இந்துவன்
Comments
Post a Comment